Categories
உலக செய்திகள்

சாப்பிட்டால் கார் மற்றும் ஐபோன் பரிசு… விநோத உணவகம்…!!!

வடக்கு கரோலினா பகுதியில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டால் தனது வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கார் மற்றும் ஐபோன் பரிசுகளை வழங்கி வருகிறது.

வடக்கு கரோலினா பகுதியில் மிஸ்டர் பீஸ்ட் என்பவர் மிகவும் பிரபலமான யூடியூபர். இவர் இணையத்தில் விநோதமான செயல்களை செய்வதன் மூலம் பிரபலம் அடைந்தவர். சமிபத்தில் இவர் வடக்கு கரோலினா பகுதியில் இலவச உணவகம் ஒன்றைத் தொடங்கினார். இங்கு வந்து சாப்பிடுபவர்களுக்கு ரொக்கம், கார், ஐபோன், ஐபேட் போன்றவற்றை பரிசாக வழங்குவதாகவும் இவர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்லத்தொடங்கினர். மேலும் அங்கே அவர்கள் ஆர்டர் செய்த உணவுடன் ஒவ்வொருவருக்கும் தலா 100 டாலர்களையும் வழங்கியுள்ளார். மேலும் அங்கு வந்த பெண் ஒருவர் இங்கே வரும் போது எனது கார் பிரேக்டவுண் ஆகிவிட்டது எனக் கூற விலையுயர்ந்த கார் ஒன்றினையும் அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். அதேபோல் நீண்ட நேரமாக அங்கே காத்திருந்த மக்களுக்கு கட்டுக்கட்டாக பணத்தினையும் இவர் வழங்கியுள்ளார். இவரது இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இவர் உலகம் முழுவது 300க்கும் மேற்பட்ட உணவகங்களைத் திறந்துள்ளார். இந்த உணவகங்களில் நீங்கள் வாங்கும் உணவுக்கு உங்களால் முடிந்த பணத்தை செலுத்தினால் போதும். இந்த தொகை முழுவது சிரமப்படும் மக்களுக்கு சென்றடையும் வகையில் சேரிட்டி ஒன்றையும் அவர் உருவாக்கியுள்ளார். மேலும் இங்கு ஆர்டர் செய்யும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக பரிசுகளையும் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |