காவல் துறையினர் விசாரணைக்கு சென்று வீட்டிற்கு வந்த வாலிபர் விஷம் குடித்தது தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அபிராமபுரத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருடைய மகன் ஹரிஷ் சனிக்கிழமை நண்பர்களோடு ஹோட்டல் சென்று உணவருந்தி விட்டு பின்பு பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், காவல் துறையினர் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி எழுதி வாங்கிவிட்டு அவரை அனுப்பி விட்டதாகவும், ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் காவல்துறையினர் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஹரிஷ் காவல்துறையினர் தாக்கியதால் தான் அவமானம் தாங்காமல் எனது சாவுக்கு நீங்க தான் காரணம் தனது மகன் சொன்னதாக அம்மா அழுதுள்ளார். இந்தநிலையில் பிரியாணி சாப்பிட்ட பணத்திற்கு பதிலாக மொபைலை வைத்துக் கொள்ளுமாறு கூறியதாகவும், இதனால் பிரச்சனை ஏற்பட்டதால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது உண்மைதான்.
ஆனால் அவரை நாங்கள் அடிக்கவில்லை என்றும், போதையில் இருந்ததால் பத்து நிமிடம் கழித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டோம். இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், ஏற்கனவே இரண்டு முறை போதை மறுவாழ்வு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.