வியாபாரி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கண்ணு கிராமத்தில் ராம்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்ராஜ் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென ராம்ராஜ் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.