Categories
மாநில செய்திகள்

சாப்பிட ஒன்னும் இல்லையா….? சிறுத்தை கொலை…. சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது…!!

கேரளாவில் சிறுத்தையை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவனந்தபுரத்தில் உள்ள இடுக்கி என்ற மாவட்டத்தில் இருக்கும் முனிவரா என்ற வனப்பகுதியில் சிறுத்தையை வேட்டையாடி சிலர் சமைத்து உண்பதாக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்துள்ளனர். அதில் வினோத் என்பவர் தன் வீட்டில் சிறுத்தை இறைச்சியை கிலோ கணக்கில் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் வினோத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் வினோத் தான் சிறுத்தையை கொன்று சமைத்து உண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் தன் வீட்டை சுற்றிலும் விலங்குகளை பிடிப்பதற்கென்றே பொறிகள் வைத்து அதில் சிக்கிய விலங்குகள் அனைத்தையும் சாப்பிட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதன் படி தற்போது பொறியில் சிறுத்தை சிக்கியதால் நண்பர்கள் 5 பேர் சேர்ந்து அதனைக்கொன்று சாப்பிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி சிறுத்தையின் பல், நகம் மற்றும் தோல் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக எடுத்து வைத்திருந்துள்ளனர்.  இந்நிலையில் இதில் தொடர்புடைய வினோத்(45), குரியகோஸ்(74), சி.எஸ்.பினு(50), சாலி குஞ்சப்பன்(54) மற்றும் வின்சன்ட்(50) போன்ற 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |