கார் கண்ணாடியை உடைத்து 3 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மண்ணூரில் ஈஸ்வரசாமி(65) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனியார் வங்கி ஒன்றில் தனது நிலத்தை அடமானம் வைத்து 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை எடுத்துகொண்டு ஈஸ்வரசாமி தனது தங்கை மகன் இந்திர விஷ்ணுவுடன் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லும் வழியில் இருவரும் சாப்பிடுவதற்காக கோவை சாலையில் உள்ள உணவகத்திற்கு சென்றனர். மேலும் காரை உணவகத்தில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற இருவரும் திரும்பி வந்து பார்த்தபோது காரில் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஈஸ்வரசாமி காருக்குள் பார்த்தபோது உள்ளே இருந்த 3 லட்சத்தி 16 ஆயிரம் ரூபாய் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் மாகளின்கபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஈஸ்வரசாமி சாப்பிட்ட உணவகத்திற்கு சென்று கண்காணிப்பு கேமாராவை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்மநபர்கள் காரப் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடியது தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த பதிவுகளின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து திருடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.