கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி பகுதியில் உணவகம் ஒன்றை பெண்கள் சிலர் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்துள்ளது. அவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது உணவகம் நடத்திய பெண்களுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கினர். அந்த குண்டு கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த சனல்பாபு மீது பாய்ந்தது.
இதனால் பேருந்து ஓட்டுநரான சனல்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சத்தம் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து துப்பாக்கியால் சுட்ட கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்று விட்டார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்களை தேட தொடங்கினர். இதில் முட்டம் பகுதியை சேர்ந்த பிலிப் என்பவர் பிடிபட்டார். இதைத்தொடர்ந்து அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.