Categories
பல்சுவை

சாமானியர்களுக்கும் சொகுசு கார்…. ரத்தன் டாட்டாவின் சாதனைகள்…. இதோ சில தகவல்கள்…!!

ரத்தன் டாட்டா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறித்து பார்க்கலாம்.

மும்பையில் வாழும் புகழ்பெற்ற டாட்டா குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ரத்தன் டாட்டா. புகழ் பெற்ற தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் டவர் டாட்டா குடும்பத்திற்கு சொந்தமானவை ஆகும். இவர் 1937-ஆம் ஆண்டு சூனு-நவால் ஹார் முஸ்ஜி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய கொள்ளுத் தாத்தா ஜாம்ஷெட்ஜி டாட்டா ஆவார். இவர் தன்னுடைய மேற்படிப்பை 1975-ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். இவருக்கு படிப்பு முடிந்தவுடன் ஒரு பெரிய கம்பெனியில் மிகப்பெரிய வேலை கிடைத்தது. இருப்பினும் ரத்தன் டாட்டா இந்தியாவில் வேலை செய்யவே விரும்பினர். இந்தியா திரும்பிய ரத்தன் டாடா தங்களுடைய சொந்த நிறுவனமான டாடா குழுமத்தில் சேர்ந்து ஒரு சாதாரண பணியாளாக 30 வருடங்கள் பணியாற்றினார்.

அதன்பின் 1991-ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இவர் டாடா குழுமத்தை உலகின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். இந்த டாடா நிறுவனம் கார்கள், தேநீர், கெமிக்கல், மென்பொருள், இரும்பு, கடிகாரம் என அனைத்து துறைகளிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தது. இந்நிலையில் டாடா நிறுவனம் வருடத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயாக ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. இந்த டாடா நிறுவனம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் சொகுசு கார்கள் தயாரிக்கும் உரிமையை வாங்கியது. இந்த டாடா நிறுவனம் இரும்பு உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் இருக்கிறது. இவருடைய டாடா ஸ்டீல்ஸ் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.

இவருடைய வளர்ச்சியை பாராட்டி ரத்தன் டாட்டாவுக்கு அரசு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கியது. இவர் அனைத்து சாமானிய மக்களும் காரில் செல்ல வேண்டும் என விரும்பினார். இதற்காக நானோ காரை உருவாக்கினார். இந்த நானோ கார் உலகின் மிகக் குறைந்த விலை கொண்ட கார் என்ற பெருமையை கொண்டுள்ளது. இதன் விலை 1.25 லட்சம் ஆகும். ஒரு முறை பாகிஸ்தான் நாட்டினர் சுமோ கார்கள் வேண்டுமென டாடா நிறுவனத்திற்கு மிகப் பெரிய ஆர்டரை கொடுத்தது. ஆனால் ரத்தன் டாட்டா பாகிஸ்தான் நம் நாட்டிற்கு ஒரு கார் கூட கொடுக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். இவர் தனக்கு பணத்தைவிட தாய்நாடே முக்கியம் என கூறினார்.

இதனையடுத்து மும்பை குண்டு வெடிப்பின் போது தாஜ் ஹோட்டலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தை சரி செய்வதற்காக பொது ஏலம் விடப்பட்டது. இந்த டெண்டருக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 2 பெரிய நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தது. ஆனால் ரத்தன் டாட்டா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 2 பேரையும் பார்க்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பின் அப்போது அமைச்சராக இருந்த ஆனந்த சர்மாவிடம் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அணுகியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் ரத்தன் டாட்டாவிடம் பேச அதற்கு ரத்தன் டாட்டா உங்களுக்கு வேண்டுமானால் இது கூச்சம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இது மிகப்பெரிய அவமானம் என அமைச்சரிடம் கூறிவிட்டார்.

இளைஞர்களுக்கு ரத்தன் டாட்டா தொழில்நுட்ப பயிற்சிகளை கற்றுக் கொடுக்கிறார். இவர் தன்னுடைய தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். மேலும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சைரஸ் மிஸ்ட்ரி என்பவரை டாடா குழுமத்தின் தலைவராக நியமித்து விட்டு டாடா ஓய்வு பெற்றார். என்னால் சிறகை விரித்து பறக்க முடியாதே நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள் என ரத்தன் டாட்டா கூறியுள்ளார்.

Categories

Tech |