கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு திமுக சார்பில் வரவேற்பும் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளின் சார்பில் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில் பட்ஜெட் குறித்து வி.கே சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியதாவது, “தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் திமுகவினருக்கு நன்றாக இருக்குமே ஒழிய அது சாமானிய மக்களுக்கு எந்த பயனையும் அளிக்காது
கார்ப்பரேட்க்கு பயன்படும் இந்த பட்ஜெட் எந்த வகையிலும் ஏழை எளிய மக்களின் துறை துயர்துடைக்க போவதில்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் பல்வேறு ஏழை குடும்பங்கள் பயன் பெற்றன. ஆனால் தற்போது இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இது பேரிடியாக மாறியுள்ளது.
தங்கத்தில் தாலி அணிவது தமிழ்பெண்களின் கவரவும் அதனை சீர் குலைத்த திமுக அரசை பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய், மாதம் ஒருமுறை மின் கட்டணம்,போன்ற திமுக அரசின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை போல பட்ஜெட்டும் மிகவும் மோசமாகவே உள்ளது. கொரோனா காரணமாக நிதிப்பற்றாக்குறை போர் காரணமாக அன்னியச் செலாவணி இழப்பு போன்றவை பற்றி எனக்கும் தெரியும். ஆனால் ஒரு குடும்பம் கஷ்டப்படும்போது தாய் எப்படி வாயையும் வயிற்றையும் கட்டி தன் பிள்ளைகளை பாதுகாப்பாலோ அதுபோலத்தான் அரசும் தன் தேவைகளை குறைத்துக் கொண்டு மக்களுக்கு பயனளிக்கும் தேவைகளை அதிகரிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.