வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் அணியும் லெதர் ஜாக்கெட் மற்றும் டிரெஞ்ச் கோர்ட்டுகளை சாமானிய மக்கள் அணிய கூடாது என்பதற்காக வட கொரியாவில் அவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய தலைவர்களின் உடைகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை நகல் எடுப்பது தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாக வடகொரியாவில் உள்ளது. வட கொரிய மக்கள் மலிவான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அணியும் லெதர் ஜாக்கெட்கள் மற்றும் ஸ்ரெஞ்சு உடைகளுக்கு வடகொரியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இவ்வாறு அணியக் கூடாது என்பதற்காக ஃபேஷன் போலீசார் தெருக்களில் உலா வந்து இது போன்ற ஆடைகளை அணிந்து இருப்பவர்களை கைது செய்கின்றனர். 2019 ஆம் ஆண்டு கிம் ஜாங் உன் லெதர் ஜாக்கெட்டுகளை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் தோன்றினார்.
அதிலிருந்து அந்த ஆடைகள் வடகொரியாவில் பிரபலமடைந்தன. ஆரம்பத்தில் சில ஒரு சில பணக்காரர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லெதர் ஆடைகளை அணிந்தனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல உள்ளூர் விற்பனையாளர்கள் போலியான லெதர் ஜாக்கெட்களை தயார் செய்து சாமானிய மக்களுக்கு புழக்கத்தில் விட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கிங் ஜாங் உன் மற்றும் அவருடைய சகோதரி இருவரும் லெதர் உடைகள் அணிந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து லெதர் என்பது வீரமிக்க பெண்களின் அடையாளம் என பிரபலமடைந்தது. இதனை தொடர்ந்து பெண்களும் அதிக அளவில் லெதர் கோரட்டுகளை வாங்கி பயன்படுத்த தொடங்கினார். இதனால் வடகொரிய போலீசார் அவர்களிடம் இருந்து அதனை பறிமுதல் செய்ய தொடங்கினார். மேலும் வட கொரிய அதிகாரிகள் கிம் ஜாங் உன்னின் ஆடைகளை போன்று வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிவது உயர்ந்த கண்ணியத்தின் அதிகாரத்தை சவால் விடும் தூய்மையற்ற செயல் எனக் கூறியுள்ளனர்.