நாம் கோவிலிலோ அல்லது வீட்டில் பூஜையில் தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம். இது போன்ற நிகழ்வு நமக்கு மனதில் சிறிய கஷ்டத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். எனவே எப்படி தேங்காய் உடைந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்த்துக்கொள்ளலாம்.
சிதறு தேங்காய் உடைக்கும்போது சகுனம் பார்க்க தேவையில்லை.
தேங்காய் உட்புறம் அழுகிய நிலையில் இருந்தால் நாம் நினைத்த காரியங்கள் சற்று தள்ளிபோகும் அவ்வளவு தான்.
நாம் அர்ச்சனைக்காக உடைக்கும் தேங்காய் தட்டு மாறி வந்தால் அபச குணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நாம் சகுணத்துக்காக உடைக்கும் தேங்காய் உட்புறம் பூ விழுந்திருந்தால் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்.
தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்சினைகள் ஏற்படும்.
கோவிலில் உடைக்கும் தேங்காயில் சகுனம் பார்ப்பது கிடையாது. சகுனம் பார்ப்பது உடைக்கப்படும் தேங்காய் உடையும் முறையை பொருத்து பலன்கள் கிடைக்கும்.
தேங்காய் சரிபாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
கண் பகுதி சிறியதாகவும், கீழ் பகுதி பெரியதாகவும் இருந்தால் குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து எல்லா விஷயங்களும் சரியாகி குடும்பத்தில் அமைதி பெருகும்.