சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக்கோரி சென்னை மற்றும் செங்கல்பட்டு பலரும் புகார் அளித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருபவர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னை தானே கடவுளின் அவதாரம் என்று கூறியும், ஆதிபராசக்தியின் மறுஉருவம் என்று பொய் பரப்புரை செய்து வருவதாக தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் புகார் அளிக்கப்பட்டது.
இதேபோல் சர்ச்சை சாமி அன்னபூரணி அம்மாவை கைது செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் இந்து மத நம்பிக்கைகளையும் சடங்குகளையும் அவமானப்படுத்தும் விதமாக அன்னபூரணி அரசு அம்மா செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.