Categories
சினிமா தமிழ் சினிமா

சாமியார் கெட்டப்பில் மிரட்ட வருகிறான் மார்க் ஆண்டனி…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்….!!!!

நடிகர் விஷால் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் லத்தி படத்திற்கு பிறகு மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் ரித்து வர்மா ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு புதிய அறிவிப்பு வரும் என படக் குழு அறிவித்திருந்தது.

அதன்படி விஷாலின் பிறந்தநாளான இன்று மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் நடிகர் விஷால் கையில் துப்பாக்கியுடன் சாமியார் வேடத்தில் இருக்கிறார். அதோடு மார்க் ஆண்டனி உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன் என்றும் விஷால் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் விஷாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |