Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமியார் வீட்டில் திடீர் சோதனை…. 300 கிலோ எடையுடைய சிலை மீட்பு…. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பேரூர் பைபாஸ் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். இவரது வீட்டில் முருகர் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி 4 அடி உயரமுள்ள முருகர் சிலையை மீட்டனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த சிலையை தான் செய்து வைத்திருப்பதாக அவர் கூறினார். ஆனால் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, நான்கு அடி உயரமுடைய, 300 கிலோ எடையுடைய வெண்கல சிலை மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் விற்பனை செய்வதற்காக சிலையை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த சிலையை அவர்தான் செய்தாரா? அல்லது எங்கிருந்தும் வாங்கி வந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |