சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தலமாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் இன்று தொடங்கி ஐந்து நாட்கள் வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதோடு கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது RTPCR நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.