தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முனியம்மாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து முனியம்மாள் கோவிலின் அருகே அமைந்துள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முனியம்மாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.