Categories
மாநில செய்திகள்

சாமி உண்டியல் பணத்தை…. ஆட்டைய போட முயன்ற ஆசாமிகள்…. வெளியான சிசிடிவி காட்சி…!!

இரண்டு கோவில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் கோவில்களில் அடிக்கடி திடீரென்று திருட்டு சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி மாநில முதலியார் பேட்டை பகுதியில் உள்ள தேங்காய்த்திட்டு என்ற பகுதியில் சம்பவத்தன்று இரவு இரண்டு கோயில்களில் திருட்டு முயற்சி நடைபெற்று உள்ளது. இதில் விநாயகர் தேவஸ்தானத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதன் பக்கத்தில் இருந்த வட பத்திரகாளி அம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து திருட முயன்ற போது ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அந்தக் கும்பல் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளது.

இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  முத்தியால் பேட்டை காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உண்டியலில் மர்ம நபர் திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |