இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் பால்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருதாயி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மருதாயி தனது மகள் கவிதா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மருதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.