Categories
தேசிய செய்திகள்

சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பிய குடும்பம்… எதிரே வந்த கார்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் அல்ஹஸ்நகர் பகுதியை சேர்ந்த வர்ஷ வலிஷா, அவரது மனைவி ஆர்த்தி வலிஷா, மற்றும் மகன் ராஜ் வலிஷா ஆகிய ஆகிய 3 பேரும் விநாயகர் சதுர்த்தி விழாவை பகுதியில் கொண்டாடிவிட்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பாலி என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் எதிரே வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் வர்ஷ வலிஷா, ஆர்த்தி வலிஷா, ராஜ் வலிஷா மற்றும் ஆட்டோ டிரைவர் என ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். விபத்திற்கு காரணமான கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |