Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட்டு கொண்டிருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சாமி கும்பிட்டு கொண்டிருந்த போது சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தடாகம் பகுதியில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 17-ஆம் தேதி வீட்டின் பூஜை அறையில் பானுமதி விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது விளக்கு தீயில் பானுமதியின் சேலை பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இதனால் உடல் கருகிய நிலையில் கிடந்த பானுமதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பானுமதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |