Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சப்த கன்னிமார்கள் எழுந்தருளிய கோவில்…. சேதமடைந்த மேற்கூரை…. கோரிக்கை விடுத்த பக்தர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் சிறப்பு மிக்க சிவகாமசுந்தரி கோவிலில் சாமி சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததனால் சீரமைத்து தர வேண்டி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சித்தேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுற்று சுவர் இடிந்து சேதமடைந்துள்ளதுடன் கோவில் சிலைகள் பராமரிப்பின்றி காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் சப்த கன்னிமார்கள் எழுந்தருளிய கோவிலில் அம்பாள் சிலை உள்ள சன்னதியில் மேற்கூரையின் மரப்பலகை இடிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு தினந் தோறும் தவறாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதனால் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை சீரமைத்து தர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |