Galaxy, M04 போனை வரும் வாரம் நம் நாட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன் விலையானது ரூபாய்.8,999 முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. RAM Plus வசதி வாயிலாக பயனாளர்கள் Samsung M04ல் 8GB RAM வரையிலும் ரேம் சேமிப்பை நீட்டிக்கலாம். இது ரூபாய்.10,000 வகை செல்போன்களில் தனித்துவமானது ஆகும்.
இந்த செல்போனில் 5000 mAh பேட்டரி சக்தி உள்ளதாக தகவல் கூறுகிறது. இது உண்மை எனில், இந்த செல்போனை ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில், சாம்சங் M13, M33 போன்ற இரண்டு மாடல்களை மிகவும் ஸ்டைலான மற்றும் சக்திமிக்க அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியது.
90s கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரையிலும் அனைவருக்கும் பிடித்த செல்போனாக சாம்சங் எம் சீரிஸ் மாடல் இருந்து வருகிறது. இந்த எம் சீரிஸ் வாயிலாக மட்டும் சாம்சங் 1 பில்லியன் அமெரிக்க டாலரை வருவாயாக ஈட்டியதாக கூறப்படுகிறது.