சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு விழாவை முன்னிட்டு புதிதாக சில சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு விழா இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது இதில் ஐந்து புதுமையான சாதனங்களை அறிமுகம் செய்யப்போவதாக சாம்சங் நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைமை அதிகாரியான டே முன் ரோ அறிவித்துள்ளார். கேலக்ஸி அன்பேக்டு விழாவில் பொதுவாக கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தனர்.ஆனால் இந்த வருடம் மேலும் சில புதுமையான சாதனங்களையும் அறிமுகம் செய்ய உள்ளனர்.
இவ்வாறு அறிமுகம் செய்யபட உள்ள சாதனங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன், கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு முந்தைய மாடல் போல் இருந்தாலும் இதில் ஹார்ட்வேர் மாற்றம் செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேலக்ஸி போல்ட் புதிய மாடல் ஸ்மார்ட்போனின் விளம்பரங்கள் தொடர்ந்து இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. கேலக்ஸி டேப் எஸ்7 முந்தைய மாடல் போல் காட்சியளித்தாலும் இதனுடைய ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் மாற்றப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி பட்ஸ் லைட் என்கிற பெயரில் புதிய ரக இயர்போன் அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இத்துடன் கேலக்ஸி வாட்ச் சாதனமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது .