இந்திய அணியின் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசி உள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் வெலிங்க்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி. அதனை தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், அதனை இந்திய அணி விரட்டியபோது மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இரு அணிகளும் ஒரே ஸ்கோர் அடித்திருந்ததால் ஆட்டம் டை ஆனது..
இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணி தொடரை வென்றிருந்தாலும் கூட ரசிகர்களுக்கு சில அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதாவது, சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் இருவருக்கும் வாய்ப்பு வழங்காததே அதற்கு காரணம். எந்த ஒரு இடத்தில் இறங்கினாலும் அதிரடியாக ஆடக்கூடிய சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதே போல் இந்தியாவின் எதிர்கால பந்துவீச்சாளராக பார்க்கப்படும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்பு வழங்காததால் ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, முதலில், வெளியில் யார் என்ன சொல்கிறார்கள் என்பது உண்மையில் நம்மை (எங்களை) பாதிக்காது. இது எனது அணி, பயிற்சியாளருடன் கலந்துரையாடிய பிறகு நான் சிறந்த அணியைத் தேர்ந்தெடுக்கிறேன். போதுமான நேரம் உள்ளது. அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் செய்யும் போது, அது நீண்ட காலமாக இருக்கும். இது ஒரு சிறிய தொடர், அதிக போட்டிகள் இருந்திருந்தால், நாங்கள் அனைவரையும் முயற்சித்து இருந்திருப்போம் என்றார்..
மேலும் நான் 6ஆவது பந்துவீச்சு விருப்பத்தை விரும்பினேன், தீபக் அதை மிகச் சிறப்பாகச் செய்தார். பேட்டர்கள் பந்தும் வீசி சிறப்பாக பேட்டிங் செய்யத் தொடங்கினால், எதிரணியை அச்சுறுத்த முடியும். இது கடினம் அல்ல, ஆனால் நீங்கள் அதை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பது தான், எனக்கு இது எளிதானது. எல்லா வீரர்களுடனும் எனக்கு ஒரே மாதிரியான சமன்பாடு உள்ளது, மேலும் ஒரு வீரரைத் தேர்வு செய்ய முடியாதபோது, அது தனிப்பட்டது அல்ல என்பது அவருக்குத் தெரியும். அது சூழ்நிலையுடன் தொடர்புடையது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் மக்களின் நபர். எனவே யாருக்காவது நான் தேவைப்பட்டால், நான் அவர்களுக்காக இருப்பேன், அவர்கள் எதையாவது மோசமாக உணர்ந்தால், அவர்கள் வந்து என்னுடன் வந்து பேசலாம். எப்போதும் கதவுகள் திறந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஏனென்றால் அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” என்று தெரிவித்தார்..