சாம்பல் பூசணிக்கு உடலைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சாம்பல் பூசணியை உட்கொண்டால் உடல் பருமனாவது தவிர்க்கபடும்.
மேலும் சாம்பல் பூசணியானது உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. சாம்பல் பூசணியானது வலிப்பு நோய்களை குணமாக்குகிறது.
உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் தணியவும் சாம்பல் பூசணி பயன்படுகிறது. வலிப்பு, மனநோய் போன்ற நரம்பு மற்றும் மூளை நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாகவும் சாம்பல் பூசணி பயன்படுகிறது. சாம்பல் பூசணியானது ஆஸ்துமா, சிறுநீரகக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதிலும் உதவுகிறது.