Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாம்பாரில் எலியை போட்டு விற்பனை செய்த உணவகம்… கோவை அருகே பரபரப்பு… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாம்பாரில் எலி செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். அவருடைய தம்பி கார்த்தி கேயன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திவ்யா நேற்று காலை தனது தம்பிக்கு சாப்பாடு தருவதற்காக அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஆப்பம் மற்றும் சாம்பார் பார்சல் வாங்கியுள்ளார்.

அதனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இருவரும் சாப்பிட்டனர். அப்போது கவரை பிரித்து சாம்பாரை ஆப்பத்தில் ஊற்றிய போது, கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது எலி அதில் செத்து கிடந்துள்ளது. அதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அவர்கள் தனது குடும்பத்தினருடன் அந்த உணவகத்திற்கு சென்று சாம்பாரில் எலி கிடந்ததை பற்றி கூறியுள்ளனர்.

அதற்கு உணவகத்தில் இருந்தவர்கள் மன்னிப்பு கேட்டனர். இருந்தாலும் அவர்கள் சமாதானம் அடையாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனால் அந்த ஓட்டல் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சம்பவம் பற்றி உணவுத் துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. அதனால் ஓட்டல் ஊழியர்கள் கடையின் கதவை மூடினார். இந்த சம்பவம் பற்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |