Categories
தேசிய செய்திகள்

சாம்பார் ஏன் நல்லா இல்ல….? தாயை சுட்டுக் கொன்ற மகன் பரபரப்பு சம்பவம்….!!!

உத்தர கன்னடா மாவட்டத்தில் சாப்பாடு ருசியாக இல்லாததால் வாலிபர் ஒருவர் தனது தாய் மற்றும் தங்கையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி இவர் தனது கணவர் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். நிலையில் பார்வதியின் மகன் மஞ்சுநாத் குடிப்பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு மஞ்சுநாத் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். பின்னர் தாயிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதையடுத்து பார்வதி சாப்பாடு கொடுத்துள்ளார்.

அந்த உணவை சாப்பிட்ட மஞ்சுநாத் சாம்பார் ருசியாக இல்லை என வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மஞ்சுநாத் தன் வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி பார்வதி மற்றும் அவருடைய மகள் ரம்யா இருவரையும் சுட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிறிது நேரம் கழித்து வெளியே சென்ற பார்வதியின் கணவர் வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மகன் மற்றும் மனைவி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மஞ்சுநாத்தை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பார்வதி மற்றும் ரம்யாவின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |