ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியின் போது ஆரோக்கியமான உணவு, கட்டுக்கோப்பான உடல், உடற்பயிற்சி போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களிடம் உள்ள உணவு முறைகளால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆரோக்கியமான உணவு முறை மற்றும் கட்டுக்கோப்பான உடல், உடற்பயிற்சி போன்றவைகள் தான் வாழ்க்கைக்கு சிறந்தவை என்று தீபிகா குமாரி மாணவ-மாணவிகளிடம் கூறினார். இந்த செய்தியை விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் கூற சொல்லியதாகவும் தீபிகா குமாரி கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் தாக்கம் அடுத்த வருடம் தெரிய வரும் என அதானு தாஸ் கூறியுள்ளார்.