Categories
ஆன்மிகம்

சாம்பிராணியில் இதை போட்டு தூபமிட்டால்…. உங்கள் வீட்டில்…. இந்த நன்மைகள் நிச்சயம் கிடைக்கும்…!!!

நம்முடைய வீடுகளில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் சாம்பிராணி புகை போடுவது வழக்கம். இப்படி செய்வதினால் தேவையற்றவை தீமைகள் விலகி தேவையானவை வீடு தேடி வரும் என்பது ஐதிகம். உங்களுடைய வீட்டிலும் கலப்படம் இல்லாமல் சாம்பிராணி புகை போட்டு வந்தால் உங்களை பிடித்த துரதிஷ்டம் விலகி விரைய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் பெருகும். அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து தூபமிட்டால்  என்ன நடக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

பொதுவாக சாம்பிராணியை தூபமிட்டால் திருஷ்டி நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட்டால் குழந்தை பேரு உண்டாகும்.

மருதாணி விதைகளைப் போட்டு தூபமிட  சூனிய கோளாறுகள் விலகும்.

தூதுவளையை போட்டு தூபமிட்டால் வீட்டில் தெய்வம் நிலைக்கும்.

சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு புகை போட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

அருகம்புல் போட்டு தூபமிட்டால் சகல தோஷங்களும் நிவாரணமாகும்.

காய்ந்த துளசி போட்டுவிட காரிய தடை மற்றும் திருமணத் தடை விலகும்.

Categories

Tech |