டிரைக்டர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் “பாம்பாட்டம்”. இந்த படத்தில் “திருட்டு பயலே”, “நான் அவனில்லை” புகழ் ஜீவன் இரட்டை கதாபாத்திரங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். அத்துடன் மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பல பேர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
ஓரம்போ, வாத்தியார், 6.2 ஆகிய திரைப்படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பாக வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள “பாம்பாட்டம்” படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு அம்ரிஷ் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் பற்றி டிரைக்டர் வி.சி.வடிவுடையான் கூறும்போது “பொதுவாக அனைவருடைய வாழ்க்கையுமே ஒரு பரமபதம் தான்.
அதுபோன்று ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம் தான் “பாம்பாட்டம்”. அந்த சாம்ராஜ்யம் சந்திக்கும் ஏற்ற, இறக்கங்கள் தான் படத்தின் கதை ஆகும். கி.பி.1500, 1980 என 3 காலக் கட்டங்களில் கதை டிராவல் ஆகும். மும்பையில் பல கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கினோம்” என்று கூறினார். இப்படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா தன் சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.