Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பண்டாரவடை ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பண்டாரவடை, ஆதினங்குடி, தென்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மின் கம்பங்கள் சேதம் அடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உரசி தீப்பொறி பறந்து வயல்கள் மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனை அடுத்து மின்கம்பிகள் உரசி கொள்வதால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

மேலும் சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பங்கள் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |