Categories
பல்சுவை

சாய்னா நேவால் – வெற்றிப்பாதையின் ரகசியம்..!!

சாய்னா நேவால் :

பிறப்பு: 17 மார்ச் 1990 ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.

2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே.

ஜூன்  21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.

அரியானாவில் இசாரில் பிறந்த சாய்னா, ஐதராபாத்திலேயே மிகப்பெரும்பாலும் வாழ்ந்திருக்கின்றார். அவரது தந்தை முனைவர் அர்வீர் சிங் எண்ணெய்வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் அறிவியலாளராகப் பணிபுரிகிறார். அவரது தந்தையும் அன்னை உசா நெவால் இருவரும் முன்னாள் இறகுப்பந்தாட்ட வீரர்கள். அவரது ஆர்வத்திற்கு வித்திட்டு பயிற்சிக்காக பாடுபட்டவர் அவரின் தந்தை. சிறுவயது பயிற்சிக்காக தனது சேமிப்பையும் உழைப்பையும் அவருக்காக செலவிட்டார். 2004ஆம் ஆண்டு பிபிசிஎல் (BPCL) நிறுவனம் அவரை பணிக்கு அமர்த்தியது.

ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சாய்னா:

1. 2012ஆம் ஆண்டு, இலண்டன் ஒலிம்பிக் – இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர். ஆகஸ்ட் 4, 2012 அன்று நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நிகழ்வில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

ஒலிம்பிக் போட்டிகளில் இறகுப்பந்தாட்டத்தில் அரையிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யிஹன் வங்கை (உலகின் தர வரிசையில் முதலிடம்)’ எதிர்த்துப் போராடினார். 13-21, 13-21 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டார்.

2. 2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் – இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண்.

சாதனைகள்:

இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர்.

உலக இளையர் இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண்.

சூப்பர் தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்

விருதுகள்:

ஆகஸ்ட்  2009-இல் அருச்சுனா விருது

ஜனவரி 2010-இல் பத்ம ஸ்ரீ விருது

ஆகஸ்ட் 2010-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

சாய்னாவின் வெற்றிப்பாதை:

போட்டி ஆண்டு முடிவு
செக்கோசுலாவிகியா இளநிலை ஓப்பன் 2003 வாகையாளர்
2004 காமன்வெல்த் இளைஞர் ஆட்டங்கள் 2004 Silver medal icon.svg வெள்ளி
ஆசிய சாடிலைட் இறகுப்பந்தாட்டப் போட்டி 2005 வாகையாளர்
உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள் 2006 இரண்டாம் நிலை
2006 காமன்வெல்த் விளையாட்டுகள் 2006 Bronze medal icon.svg வெண்கலம்
பிலிப்பைன் ஓப்பன் 2006 வாகையாளர்
ஆசிய சாடிலைட் இறகுப்பந்தாட்டப் போட்டி 2006 வாகையாளர்
இந்திய தேசிய இறகுப்பந்தாட்டப் போட்டிகள் 2007 வாகையாளர்
தேசிய விளையாட்டுகள் இந்தியா 2007 Gold medal icon.svg தங்கம்
சீன தாய்பெய் ஓப்பன் 2008 வாகையாளர்
இந்திய தேசிய இறகுப்பந்தாட்டப் போட்டிகள் 2008 வாகையாளர்
2008 காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுகள் 2008 Gold medal icon.svg தங்கம்
உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள் 2008 வாகையாளர்
இந்தோனேசிய ஓப்பன் 2009 வாகையாளர்
ஹாங்காங் ஓப்பன் 2010 வாகையாளர்

 

Categories

Tech |