திருமணம் குறித்து பேட்டியில் சாய்பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார்.
மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது.
சாய்பல்லவி உடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூட்டமாக வந்து விடுகின்றன. அப்படி ரசிகர்கள் வந்தபோது படத்தின் கதாநாயகன் ராணா சாய் பல்லவிக்கு பவுன்சராக மாறி இருக்கின்றார். மேலும் சாய்பல்லவிக்கு குடை பிடித்து நின்று இருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை சாய்பல்லவியின் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்தார். சாய்பல்லவி, ராணா விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் அல்லாமல் படப்பிடிப்பிலும் பவுன்சராக இருந்ததாக பேட்டியில் கூறி இருக்கின்றார்.
இந்த நிலையில் சாய்பல்லவியிடமும் திருமணம் குறித்து கேட்கப்பட்டபோது அவர் கூறியுள்ளதாவது, வீட்டில் நாங்கள் படுகா மொழியில் தான் பேசுவோம். ஆனால் நான் அதிகமாக தெலுங்கில் தான் பேசுவேன். இதனால் என்னப்பா நீ தெலுங்கு பையனைத்தான் திருமணம் செய்ய போகிறாய் என ஜோக்கடிப்பார். தற்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. நான் சிங்கிளாக சந்தோஷமாக இருக்கிறேன். என்னை மேலும் அறிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். நான் அதில் கவனம் செலுத்துகின்றேன் என கூறியுள்ளார்.