தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தொற்று பரவல் சற்று சீரடைந்து வருகிறது. இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஷீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை மற்றும் இரவு பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது இரவு 10.30 மணிக்கு நடைபெறும் “செஜார்த்தி ஆர்த்தி ஆரத்தி பூஜை” இரவு 10.00 மணிக்கு நடைபெறும். அதிகாலை 4:30 மணிக்கு நடைபெறும் “காகட் ஆர்த்தி பூஜை” 5.15 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.