நடிகை சாய் பல்லவி புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்தி பரவிவருகிறது.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.
அண்மையில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா2 திரைப்படத்தில் பழங்குடிய பெண்ணாக சாய் பல்லவி நடிகை இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகின்றது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக சில நாட்களாகவே செய்து பரவி வருகின்றது. ஆனால் இதை படக்குழுவினர் முற்றிலுமாக மறுத்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது வருகின்ற 22ஆம் தேதி ஆந்திராவில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.