சாய் பல்லவி, நாகசைதன்யா இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் பிரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. இதை தொடர்ந்து இவர் தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் இவர் மாரி 2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் மாரி -2 படத்தில் தனுஷ், சாய் பல்லவி இணைந்து நடனமாடிய ரௌடி பேபி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது .
தற்போது தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது . இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.