Categories
தேசிய செய்திகள்

சாராயம் விற்கும்போது மாட்டல… எருமமாடு நால சிக்கிய விவசாயிகள்… என்ன நடந்தது…? நீங்களே பாருங்க…!!!

குஜராத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 3 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் எப்படி பிடிபட்டனர் என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

குஜராத் மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அரசு அல்லது தனியார் என யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்பது தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த மூன்று விவசாயிகள் கள்ளச்சந்தையில் மது வாங்கி கொண்டு வந்து அதனை விற்பனை செய்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வாங்கிக் கொண்டு வரும் மது பாட்டில்களை மாட்டுக் கொட்டகையில் மாட்டிற்கு தண்ணி வைக்கும் தொட்டிக்குள் பதுக்கி வைத்துள்ளனர். இவர்கள் விற்பனை செய்யும் வரை யாரிடமும் மாட்டவில்லை. பல நாட்களாக இதை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தொட்டியில் வைத்திருந்த மது பாட்டில்கள் எப்படியோ ஒன்றோடு ஒன்று இணைந்து உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் தொட்டி முழுவதும் மது கலந்துள்ளது. இது தெரியாமல் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த எருமமாடு அந்த தண்ணீரை குடித்ததனால் அந்த எருமை மாடுகள் மயங்கி விழுந்தனர். மாடுகளுக்கு ஏதாவது வியாதி வந்திருக்குமோ என்ற பயத்தில் அவர்கள் மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்தனர். அப்போது எருமைகள் மது குடித்து இருந்தது தெரிய வந்தது. இது எடுத்து மருத்துவர்கள் அப்பகுதியில் உள்ள காவல்துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த மூன்று விவசாயிகளை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 32 ஆயிரம் மதிப்புள்ள 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |