தமிழகத்தில் சாராயம் விற்பது அரசின் வேலை இல்லை என்று தமிழக அரசை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் பாலு ரவுடிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடி நோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இளைஞர்களை பட்டப்பகலில் குடிக்கும் குடிநோயாளிகள் ஆக மாற்றி இருக்கிறது இந்த அரசு என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் காவல் விமர்சனம் செய்துள்ளார். மேலும் சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அதை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.