சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வைத் துறை, பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கு தாசில்தார் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இது சின்னசேலம் பகுதியில் இருந்து தொடங்கி விஜயபுரம் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மேலும் மாணவர்கள் சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பி கொண்டு சென்றனர்.