Categories
மாவட்ட செய்திகள்

“சாராய விற்பனையை தடுக்காத போலீஸ்”…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!!!!

போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் இருக்கும் ரயில்வே கேட்பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை கூறியும் போலீசார் சாராய விற்பனையை தடுக்காத நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தாண்டவபுரம் கடைவீதியில் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Categories

Tech |