கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
மேலும் சசிகலா தான் அதிமுக கட்சியை காப்பாற்ற வந்தே தீருவேன் என்றும், அதிமுகவை நிர்வாகம் செய்ய தான் வருவேன் என்றும் கூறி வருகிறார். இதற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் விமர்சித்தும், தக்க பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் பேசுகையில், நிருபர் ஒருவர் “சசிகலா தரப்பில் இருந்து உங்களுக்கு போன் கால் வந்தது என்றால் என்ன பண்ணுவீர்கள்?” என்று கேட்டதற்கு,” சாரி ராங் நம்பர் என்று வைத்துவிடுவேன்” என்று தன்னுடைய ஸ்டைல் பதிலளித்து சசிகலாவை கலாய்த்துள்ளார். இந்த பதிவு தற்போது அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.