Categories
மாநில செய்திகள்

“சாரி… இனி உங்க டீசல் எங்களுக்கு வேண்டாம்”… கெத்து காட்டிய தமிழக அரசு…!!!!

மத்திய அரசிடம் டீசல் வாங்குவதை  தமிழக அரசு நிறுத்தியுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இதனை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை வாங்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் டீசலின் விலை தற்போது உயர்ந்துள்ளதால் மத்திய அரசிடம் இருந்து மொத்தமாக டீசல் வாங்குவதை நிறுத்தி விட்டதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்து இருக்கிறது டீசலின் விலை 113 ரூபாய்க்கு உயர்ந்ததால் தமிழ்நாடு போக்குவரத்து துறை டீசல் வாங்குவதை நிறுத்தி கொண்டுள்ளது.

மேலும் கூடுதல் விலைக்கு வாங்குவதால் ஒரு நாளைக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் டீசல் வாங்குவதை நிறுத்தி உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருக்கிறது. மேலும் இதற்கு மாற்று ஏற்பாடாக டீசல் தேவையை சில்லறை விற்பனை மூலமாக பெறுவது என தமிழ்நாடு போக்குவரத்து துறை முடிவு செய்து இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டீசல் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் லிட்டருக்கு 63 பைசா குறைக்கப்பட்டு டீசல் தமிழ்நாடு போக்குவரத்து துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |