Categories
தேசிய செய்திகள்

“சாரி மேடம் நான் டெலிவரிக்கு போகவேண்டும்”…. பீட்சா ஆறுது விட்ருங்க…. ஸ்விகி ஊழியரை அடித்த பெண்…!!!!!!

போபாலில் ஸ்விகி  ஊழியரை நடுரோட்டில் பெண் ஒருவர் செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் ஜாபல்பூர் பகுதியில் பீட்சா டெலிவரிக்கு சென்றுகொண்டிருந்த ஸ்விகி  ஊழியரை ஒரு பெண் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அந்த பெண்ணை சமரசம் செய்ய முயன்றும் தொடர்ந்து அந்த பெண் வாலிபரை செருப்பால் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது ஸ்விகி ஊழியர் தவறான ரூட்டில் வந்து முன்னே சென்று கொண்டிருந்த பெண்ணின் ஸ்கூட்டரில் மோதி அந்த பெண் கீழே விழுந்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் ஊழியரை தனது செருப்பால் பலமுறை அடுத்து தாக்கியிருக்கிறார். அந்த வாலிபர் “சாரி மேடம் நான் டெலிவரிக்கு போகவேண்டும்” என கூறியும் அந்த பெண் விடாமல் அவரை அடித்து தாக்கியதாக வாகன ஓட்டிகளை கடுப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் அங்கிருந்தவர்களில் சிலர் கீழே விழுந்த பெண் செல்போன் பேசியபடி ஸ்கூட்டர் ஓட்டியதாக  கூறியுள்ளனர்.

கஸ்டமர்கள் ஆடர் செய்த உணவை சூடு ஆறுவதற்குள் வேகமாக டெலிவரி செய்ய வேண்டும் என ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தாமதமாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் மீது நெகட்டிவ் கருத்துக்களை வந்தால் அது அவர்களது வேலையை கூட பாதிக்கும். அதனால் அந்த ஊழியர்ககளில்  பலர் டென்ஷனில் வாகனத்தை இயக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் உணவை டெலிவரி செய்ய வேண்டும் என்பதால் சர் புர்ர் வாகனத்தை ஓட்டி இடையூறு ஏற்படுத்துவதால்  மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் வீடியோவை பார்த்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |