Categories
தேசிய செய்திகள்

சாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை…. காரணம் என்ன தெரியுமா….??

மும்பையில் உள்ள சாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் உபயோகப் படுத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் நடிகர் ஷாருக்கானின் மகன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஆரியன் கான் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மும்பை சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் அவருடைய மகனை காண மும்பை ஆர்தர் சிறைக்குச் சென்றதாக கூறப்பட்டது. அங்கு ஷாருக்கான் தன் மகனிடம் கண்ணீர் மல்க தைரியமாக இருக்குமாறு கூறியதாகவும் இந்த சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்ததாகவும் சிறைத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் மும்பையில் உள்ள ஷாருக்கானின் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் இறங்கினர். சோதனையின்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |