பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் தென்மண்டல தேயிலை தோட்ட வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை சுற்றி ஏராளமான மரம், செடி, கொடிகள் புதர்கள் உள்ளது. இந்நிலையில் தோட்டப்பகுதிக்குள் சாரை பாம்பு ஒன்று அங்குமிங்குமாக ஊர்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு நாகப்பாம்பும் அந்த இடத்திற்கு வந்தது. இந்த 2 பாம்புகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு நடனம் ஆடியது. இதைப்பார்த்து அச்சமடைந்த அலுவலக ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்புகளை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் 2 பாம்புகளும் இணைந்திருந்ததால் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் அப்பகுதி மக்களுக்கு பரவ ஆரம்பித்தது. உடனே அங்கு வந்த பொதுமக்கள் இதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். மேலும் சுமார் ஒரு மணி நேரமாக அங்கு நடனமாடிக் கொண்டிருந்த பாம்புகள் தானாகவே புதருக்குள் சென்று மறைந்தது.