மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ், ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகும்.. இந்த நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். (Mercedes Benz Vision EQXX) என்ற புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது.. இந்த புதிய மாடலான EQXX கார் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவின் போது, அறிமுகம் செய்யப்பட்டது.. இந்த புதிய எலெக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 1,000 கிலோமீட்டர் வரை செல்லும்..
இந்த புதிய 2022 இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். மாடல் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இவை பூமியின் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது..
இந்த எலெக்ட்ரிக் காரின் மொத்த எடை 1,750 கிலோவாம்.. இதிலுள்ள பேட்டரி 900 வோல்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.. இருப்பினும், இந்த பேட்டரியின் அளவில் 50% மற்றும் எடையில் 30% குறைவாக இருக்கிறது. இதனுடைய மேற்கூரையில் மெல்லிய சோலார் பேனல்கள் இருக்கின்றன. இவை காரை 25 கி.மீட்டர் வரை இயக்குவதற்கு வழி செய்கிறது.