Categories
சினிமா தமிழ் சினிமா

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள்… டுவிட்டரில் வெளியிட்ட ஆர்யா… குவியும் லைக்ஸ்…!!

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் பிரத்தியேக புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். தற்போது இவர் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் தயாராகிவருகிறது . இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார்.

உடற் கட்டமைப்பை மாற்றிய இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலடித்து வந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பிரத்தியேக புகைப்படங்களை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Categories

Tech |