இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய போஸ்டருடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் உருவான டெடி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை, எனிமி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
https://twitter.com/beemji/status/1375786938515345410
இதில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையை ஏற்றி அனைவரையும் மிரள வைத்தார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது . இந்நிலையில் ‘சார்பட்டா பரம்பரை படத்தின் கேரக்டர் வீடியோ ஒன்று நாளை காலை 11 மணிக்கு வெளியாகும்’ என இயக்குனர் பா.ரஞ்சித் அசத்தலான போஸ்டருடன் அறிவித்துள்ளார்.