Categories
சினிமா தமிழ் சினிமா

‘சார்பட்டா பரம்பரை’ பட டப்பிங்கை நிறைவு செய்த காளி வெங்கட்… மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு…!!!

சார்பட்டா பரம்பரை பட டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாக நடிகர் காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், அனுபமா குமார், காளி வெங்கட், பசுபதி, சஞ்சனா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

 

தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் காளி வெங்கட் சார்பட்டா பரம்பரை பட டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை டப்பிங் நிறைவு, ஆழமான, தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி’ என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |