தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்தில் புதிய கட்டடம் கட்டப்படுமா? என்று எம்.எல்.ஏ. ரா.மாணிக்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார்.