Categories
சினிமா தமிழ் சினிமா

சார்மிக்கு இவருடன் திருமணமா…? வெளியான தகவல்… விளக்கம் அளித்த பிரபல இயக்குனர்…!!!!

காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்  நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் இவர் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கின்றார். சமீப காலமாக சார்மிக்கும் இயக்குனர் பூரி ஜெகன்னாத்திற்கும்  இடையே காதல் எனத் தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து  கொண்டிருந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் பற்றி ஹைதராபாத்தில் நடைபெற்ற பட விழா நிகழ்ச்சியில் பூரி ஜெகன்னாத் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

அது பற்றி அவர் பேசும்போது எனக்கு சார்மி பல விஷயங்களில் ஆதரவாக இருக்கின்றார். நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்கின்றோம் 50 வயது பெண்ணுடன் சேர்ந்து படம் தயாரித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் சார்மி இன்னும் இளமையான பெண்ணாக இருப்பதினால் எங்கள் இருவரையும் இணைத்து தவறாக பேசுகின்றார்கள். காதல் கவர்ச்சி எல்லாம் கொஞ்ச நாட்கள் தான் நட்புதான் நிரந்தரம். சார்மியை 13 வயதில் இருந்தே எனக்கு தெரியும் 20 வருடங்களாக அவரோடு சேர்ந்து பயணம் செய்கின்றேன். அவர் எனக்கு நல்ல சினேகிதி எங்கள் இருவர் இடையே எந்த தவறான உறவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |